திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு: பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.;
சென்னை,
திருவண்ணாமலையில் நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது, திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலையில் மலைச்சரிவிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமிரப்பு கட்டிடங்களை கட்டியவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.