ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்டுக்கான எந்திர சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்

எல்.வி.எம்.3 ராக்கெட்டின் மேல்நிலைக்கு சக்தி அளிக்கும் சி.இ.20 கிரையோஜெனிக் எந்திர சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.;

Update:2025-11-20 21:18 IST

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் திரும்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்திற்காக பல்வேறு சோதனைகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட எல்.வி.எம்.3 ராக்கெட்டின் மேல்நிலைக்கு சக்தி அளிக்கும் சி.இ.20 கிரையோஜெனிக் எந்திர சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

எல்.வி.எம்.3 ராக்கெட்டின் மேல் நிலைக்கு சக்தி அளிக்கும் சி.இ.20 கிரையோஜெனிக் எந்திரம், ஏற்கனவே 19 முதல் 22 டன் வரையிலான உந்துதல் நிலைகளில் ஒரே தொடக்கத்துடன் செயல்பட தகுதி பெற்றுள்ளது.

Advertising
Advertising

இந்த நிலையில், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ புராபல்ஷன் வளாகத்தில் எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் சி.இ.20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 10 வினாடிகள் வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனை மூலம் பற்றவைப்பு மற்றும் இயங்கும் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல-சுற்றுப்பாதை பணிகளை நோக்கிய பணிகளுக்கு சி.இ.20 எந்திரத்தின் பல விமான மறுதொடக்கங்கள் தேவைப்படும். இதன் மூலம் இஸ்ரோ ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்