சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
சென்னையில் பின்வரும் பகுதிகளில் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய 2 நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு;
”நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை பகுதியில் 22.11.2025 மற்றும் 23.11.2025 காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம்.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை 33/11 கி.வோ. துணைமின் நிலைத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய பணியாக ஐந்து 33.கி.வோ பழைய பிரேக்கர்கள் நீக்கப்பட்டு, புதிய பிரேக்கர்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவிருப்பதால், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ, பைக்ராப்ட் கார்டன் தெரு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்தபின் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். மின் நிறுத்தப் பகுதிகளுக்கு பின் மின்னூட்டம் வழியாக கூடுமான வரையில் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்டுகிறது."