என்ஜினீயரிங் கலந்தாய்வு; மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-06-11 19:58 IST
என்ஜினீயரிங் கலந்தாய்வு; மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

சென்னை,

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கி ஜூன் 6-ந்தேதி முடிவடைந்தது. நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்