எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் மாற்று பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.;
சென்னை,
சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் இந்த மாதம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.13352), நாளை (புதன்கிழமை), 15, 16 ஆகிய தேதிகளில் கோவை ரெயில் நிலையம் செல்லாமல் போத்தனூர், இருகூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக தன்பாத் செல்லும்.
* கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (12678), நாளை (புதன்கிழமை), 15, 16 ஆகிய தேதிகளில் கோவை ரெயில் நிலையம் செல்லாமல் போத்தனூர், இருகூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக பெங்களூரு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.