ஈரோடு: சாலை தடுப்புச்சுவரில் மோதி ஆம்னி பஸ் விபத்து; 15 பேர் காயம்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-31 07:23 IST

கேரளாவில் இருந்து நேற்று இரவு கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த ஆம்னி பஸ் முயன்றது.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்