ஈரோடு: நுழைவுபால சுவர் இடிந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிப்பு

ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது.;

Update:2025-10-25 04:59 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கேட்புதூர் என்ற இடத்தில் ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்தும் இந்த ரெயில்வே மேம்பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறது. இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் இந்த வழியாக தான் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கேட்புதூர் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. கான்கிரீட் தடுப்பு சுவர் இடிந்து விழும்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் நுழைவு பாலத்ைத கடக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் வழியாக கரூர் சென்று அங்கிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட்டது.

இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. அதாவது இந்த ரெயில் கரூரில் இருந்து ஈரோடு வந்து இங்கிருந்து சேலம் வழியாக கைசூரு செல்லும். ஆனால் நேற்று கரூரில் இருந்து ஈரோடு வராமல் நேரடியாக சேலம் சென்றது. அந்த ரெயிலுக்காக ஈரோட்டில் காத்திருந்த பயணிகள் மாற்று ரெயில் மூலம் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்