திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.;
திண்டுக்கல்,
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையின்போது, 2 கடைகளில் சல்பர், போட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி மருந்துகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த வெடி மருந்துகள், எலெக்ட்ரிக்கல் டெடனேட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.