கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை - மாணவர் எடுத்த விபரீத முடிவு

மாணவர் தினேஷ் குமார் கடந்த 20 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.;

Update:2025-12-03 17:30 IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18 வயது). இவர், திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20 நாட்களாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் அவரது தந்தை ஏன் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றுகிறாய் என்று கூறி தினேஷ்குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாாின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்