பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை; கணவரை பிரிந்து வாழ்ந்தவர் விபரீத முடிவு
கார்த்திகா ராணி தனது பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் தனியாகவே வசித்து வந்து உள்ளார்.;
சென்னை,
சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வந்தவர் கார்த்திகா ராணி. 30 வயதான இவர் டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மணிகண்டன் 5 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்று உள்ளார். பெண் காவலர் கார்த்திகா-ராணிக்கு 13 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச்சேர்ந்த கார்த்திகா ராணி தனது பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் தனியாகவே வசித்து வந்து உள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுடனேயே போலீஸ் வேலையை அவர் செய்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பெண் காவலர் கார்த்திகா ராணி நேற்று மாலை 4 மணி அளவில் டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் தான் வசித்து வந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ' செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். காவலர் கார்த்திகாராணி தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்சினை மட்டும்தான் காரணமா? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? நடத்தப்பட்டு என்பது பற்றியும் விசாரணை வருகிறது.இது கார்த்திகா தொடர்பாக ராணியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் யார்-யாருடன் செல் போனில் அதிகமாக பேசி உள்ளார் என்பது பற்றிய தகவல்களை திரட்டியுள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காவலர் கார்த்திகா ராணியுடன் பணிபுரிந்து வந்த அவரது தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திகா ராணி உயிர ழந்தது பற்றி கொடைக்கானலில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்களும் சென்னைக்கு விரைந்து உள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து கார்த்திகா ராணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.