சரக்கு ரெயிலில் தீ விபத்து.. மேலும் 4 ரெயில்கள் ரத்து - வெளியான முக்கிய தகவல்
பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.;
சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளித்து வருகிறது.
தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதன்படி சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் கோவை மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய ரெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி விரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் இருந்து சென்னை வரும் புளூமவுண்டன் எக்ஸ்பிரஸ் திருவாலங்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வரவேண்டிய கோவை சேரன் அதிவிரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 300 மீ தூரத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பிடித்து எரியும் 5 பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் அகற்றப்பட்டு திருவள்ளூருக்கு கொண்டு செல்லப்பட்டன.மொத்தம் 3 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையே ரெயில் சேவை முடங்கி உள்ளது. ரெயில் சேவை பாதிப்பால் திருவள்ளூரிலிருந்து சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரக்கோணம் மார்க்கமாக சென்னை சென்டிரல் நோக்கி வரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மைசூரு - சென்னை காவிரி ரெயில், கோவை - சென்னை சேரன் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் - சென்னை ஜோலார்பேட்டை ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரக்கு ரெயில் தீ விபத்து தொடர்பாக மேலும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து இன்று பிற்பகல் சென்னை புறப்பட வேண்டிய சதாப்தி உள்ளிட்ட இரு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, வந்தே பாரத் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத், இன்டர்சிட்டி ரெயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயில் காட்பாடி வரையே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் முழு விவரம்:-