நாகையை தொடர்ந்து திருவாரூர்... தொண்டர்கள் மத்தியில் மிதந்து வரும் விஜய்யின் வாகனம்
சாலையில் இரு புறங்களிலும் சூழந்துள்ள தவெக தொண்டர்கள், விஜய்யை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.;
திருவாரூர்,
தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று முதல் நாகை மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்தார். அதன் பின்னர் திருவாரூரில் பிரசாரம் செய்வதற்காக விஜய் தற்போது திருவாரூர் வந்துள்ளார்.
சாலையில் இரு புறங்களிலும் சூழந்துள்ள தவெக தொண்டர்கள், விஜய்யை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். கட்டுக்கடங்காமல் திரண்டுள்ள தொண்டர்கள் கூட்டத்தால், விஜய் வரும் வாகனம் மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. விஜய்யை பார்த்த தவெக தொண்டர்கள், மகிழ்ச்சி பெருக்கில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
வரும் வழியில் தொண்டர்கள் அளித்த பிரமாண்ட மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார். திருவாரூரில் தியாகராஜர் கோவில் தேரோட்டத்திற்கு பிறகு தற்போதுதான் அங்கு இவ்வளவு பிரமாண்டமாக மக்கள் கூட்டம் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. பிரசாரம் செய்யவுள்ள இடத்துக்கு செல்ல இன்னும் ஒருமணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.