திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-31 08:42 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. 10-வது நாளான டிசம்பர் மாதம் 3-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று சென்னையை சேர்ந்த நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலில் உள்ள உள் மற்றும் வெளி பிரகாரங்களில் உள்ள தூண்கள், சிற்பங்கள், உட்பிரகாரங்கள், இரும்பு கதவுகள் மற்றும் நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

உழவார பணி குழுவினருடன் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணியில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட கோவிலுக்கு வந்திருந்த ஆன்மிக பக்தர்கள் வெளிநாட்டினரின் செயலை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்