சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு - மேயர் பிரியா

வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-12 09:32 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ரூ. 180 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடசென்னை பகுதிகளில் 11 சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் சமுதாய திறந்து வைக்கப்படும்.

தூய்மை பணியாளர்களுக்கு வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இது தூய்மை பணியாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த முறையை விட இந்த முறை மழை குறைவாகவே பெய்துள்ளது. மாநகராட்சி சார்பில் ஆக்ஸ்ட் மாதம் முதலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை வரக்கூடிய சூழலை பார்த்துக்கொண்ட பின் தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்