விநாயகர் சதுர்த்தி: அண்ணாமலை வாழ்த்து

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்;

Update:2025-08-27 08:51 IST

சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வினைகளைத் தீர்த்து வெற்றிகளை வழங்கிடும் மங்கள நாயகன். கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அருள் பாலிக்கும் அருகம்புல் பிரியன். அனைத்திற்கும் முதலான தெய்வமாக வணங்கப்படும் கணபதியைச் சிறப்போடு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் வாழ்விலும் செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட விநாயகப் பெருமானை மனதார வேண்டுகிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்