பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கார் கோவை அருகே மதுக்கரை சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காரில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கேரளாவைச் சேர்ந்த கிரண் (28), நபில் (30) மற்றும் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் (30) மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோவையைச் சேர்ந்த நாசர் (36), சாதிக் பாஷா (29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் சப்ளை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.