கடலூரில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
கடலூரில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகையைச் சேர்ந்த நவீன் (25). இவர் கஞ்சா விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நவீன் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து பதுக்கி வைத்துள்ள கஞ்சாவை மீட்க நவீனை அண்ணாமலை நகர் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது நவீன் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் நவீனின் கால்முட்டியில் சுட்டு பிடித்தனர்.
இதில் காயமடைந்த நவீன் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவீன் தாக்கியதில் காயமடைந்த காவலர் ஐயப்பனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.