சென்னையில் காதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட காதலி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒன்றாக அறையில் தங்கிய காதலன் தவிக்கவிட்டு விட்டுசென்று விட்டானே என்று எண்ணிய திரிஷா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.;

Update:2025-09-09 19:17 IST

சென்னை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா. 20 வயதான இளம்பெண்ணான இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த 22 வயது வாலிபரான ராபினும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் வேப்பேரி போலீஸ் நிலையம் பின்புறம் டவுட்டன். மேம்பாலம் அருகில் பூங்காவை ஒட்டி உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் அது அறையில் வைத்தே மோதலாக வெடித்தது. இதைத் தொடர்ந்து லாட்ஜில் இருந்த காதலன் வெளியேறி உள்ளார். அப்போது அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்றுள்ளார்.

ஒன்றாக அறையில் தங்கிய காதலன் இப்படி தவிக்கவிட்டு விட்டுசென்று விட்டானே என்று எண்ணிய திரிஷா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிறிது நேரம் கழித்து லாட்ஜுக்கு பாட்டியில் வந்த ராபின் அறையின் கதவை நிறந்து பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் செய்வறியாது தவித்த ராபின் திரிஷாவின் தோழி ஒருவருக்கு போன் செய்து நானும் திரிஷாவும் வேப்பேரியில் உள்ள வாட் ஜில் அறை எடுத்து தங்கினோம். அவர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார் என கூறி லாட்ஜி பெயர், அறை எண் ஆகியவற்றையும் தெரிவித்து உள்ளார். நானும் எனது வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தோழி உடனடியாக திரிஷாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வாட்ஜுனக்கு போன் செய்து திரிஷா தங்கி இருந்த அறை எண்ணை குறிப்பிட்டு அங்கு சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி, லாட்ஜு ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்த போது அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாற்று சாவி மூலமாக கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அங்கு திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விரைத்து சென்றுதிரிஷா உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,இதற்கிடையே காதலன்ராபினும் செங்குன்றம் எடப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாருக்குள் தெரிய வந்துள்ளது.இதைத்தொடாந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என இரண்டு பெற்றோர்களும் முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக எடப்பாளையத்தில் உள்ள ராபின் வீட்டுக்குச் சென்று திரிஷாவின் பெற்றோர் பேசிவிட்டும் வந்துள்ளார்கள். திருமணம் தொடர்பாக விரைவில் பேசி முடிவு செய்து கொள்ள இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இப்படி திரிஷாவின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டிய நிலையில்தான காதல் ஜோடி லாட்ஜில் அறை எடுத்து தங்கி உயிரை மாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராபினின் காதலி திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அறையை வெளிப்பக்கமாக பூட்டி சாவியை ராபின் எடுத்து சென்றுள்ளார். இதன்மூலம் திரிஷாவை தூக்கில் ராபின் கொலை செய்து தொங்க விட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலிசாரிடம் கேட்டபோது, இருவரும் இதுவரையில் தற்கொலை செய்திருப்பதற்கான அடையாளங்களே காணப்படுகின்றன என்று தெரிவித்தனர்.

இருப்பினும் திரிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்க வந்த பிறகுதான் அவரது மரணம் தொடர்பான முழு விவரமும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறினார்கள்.வேப்பேரி போலீஸ் நிலையத்தில் இன்று திரிஷாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.அவர்கள் கூறும்போது, திரிஷா எப்படி இறந்தார் என்பது மர்மமாக இருப்பதாக கூறினார்கள். இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் நிலையில் தெரிவித்த நிலையில் எதற்காக காதலர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசிடம் கேட்டபோது, என்ன காரணத்துக்காக இது போன்ற முடிவை ராபினும் திரிஷாவும் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. லாட்ஜ் அறையில் என்ன நடந்தது என்பது இருவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் செல்போன் உரையாடல்களோ அல்லது செய்திகளோ கிடைத்தால் மட்டுமே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரண, தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருதரப்பை சேர்ந்த உறவினர்களிடமும் காதல் ஜோடி தற்கொலைக்கான. காரணம் குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் தான் காதல் ஜோடி மரணத்தில் உள்ள மர்மமும் விலகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்