கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது - சென்னை ஐகோர்ட்டு வேதனை

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது என்று நீதிபதி கூறினார்.;

Update:2025-04-28 18:39 IST

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வேல்முருகன் முன் இன்று அரசு அதிகாரி தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, அரசு அதிகாரிகளால் கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது.

கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் கோர்ட்டின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது. 60 சதவீத கோர்ட்டு நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25 சதவீதம் அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது. வெறும் 7 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது. கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்