திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்
"அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என சீமான் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், அரசியர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.