சென்னையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-10 04:30 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“சென்னை மாநகராட்சியில் இதுவரை 12 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 29 ஆயிரத்து 267 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை மண்டலம், கலாயணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) 13-வது முகாம் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்