கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிக மழை பதிவு

தமிழகத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரையில் கனமழை பெய்துள்ளது .;

Update:2025-11-29 10:36 IST

சென்னை,

‘டிட்வா' புயல் இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (சனிக்கிழமை) காலை அடைந்துள்ளது. சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்று அதன் நகர்வை பொறுத்து, அது எங்கே கரையை கடக்கும்? என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று தமிழகத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 25. செ.மீ. கனமழை பெய்துள்ளது .

வேதாரண்யத்தில் 19 செ.மீ. , வேளாங்கண்ணியில் 13 செ.மீ. , பாம்பனில் 10 செ.மீ. , ராமேஸ்வரம் , காயல்பட்டினம், சிவகாசி இளையான்குடி பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்