தமிழகத்தில் கனமழை பாதிப்பு - மத்திய குழு அமைப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-23 16:40 IST

சென்னை,

தமிழகத்தில் தற்போது பெய்து வருகின்ற தொடர் கனமழையின் காரணமாகவும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி உள்ளன.

இதனை தொடர்ந்து, நெல்லின் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறைக்கு, தமிழக உணவுத் துறை வாயிலாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழகம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு 3 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்