“நான் இருக்கிறேன்.. தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்..”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய தான் இருக்கிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று முதல்-அமைச்சர் கூறினார்.;

Update:2025-09-24 13:24 IST

கொளத்தூர்,

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

படித்துவிட்டோம் வேலை கிடைத்துவிடும் என மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அஞ்சல் வழியாக மேற்படிப்பு படிக்க வேண்டும். படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணையாகவும் உறுதுணையாகவும் நிற்கும்.

என் உடலில் உயிர் இருக்கிற வரையில்.. தலைவர் கலைஞர் கற்றுத்தந்துள்ள உழைப்பு, என் உதிரத்தில் உள்ளவரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்... நான் இருக்கிறேன். தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்புக்கு, திராவிட மாடல் அரசு துணை இருக்கும். அதிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் இருக்கிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என உறுதியளிக்கிறேன்”. 

கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துப் போகக்கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்திற்கும், உங்களுக்கும் என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்