எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

நான் டெல்லி சென்றபோது வெள்ளை,காவி கொடியை தூக்கி செல்லவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update:2025-05-27 13:48 IST

சென்னை,

சென்னை கொளத்தூரில் ஜிகேஎம் காலனியில் உள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். 150 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார். ஓதுவார் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளி பிரியவதனாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அதனை தொடர்து பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லிக்கு வெள்ளைக்கொடியோ, காவிக்கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன். தமிழக அரசை குறை சொல்ல எதுவும் இல்லாததால், டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்