”காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்..” - பள்ளிகளுக்கு எச்சரிக்கை

விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2025-09-26 11:09 IST

கோப்புப்படம் 

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றன. அதை தொடர்ந்து, நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 5 வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவை சுட்டிக்காட்டி தனியார் பள்ளிகள் இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, கல்வி முறையில் சமநிலையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகள் இந்த சுற்றறிக்கையை பின்பற்றி, கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்