மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.;

Update:2025-11-30 09:27 IST

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மதுரவாயல் போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்