டிசம்பரில் இருந்து எல்.எச்.பி. பெட்டிகளாக மாறும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எல்.எச்.பி. பெட்டிகள் என்பது நவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட ரெயில்பெட்டிகளாகும்.;

Update:2025-10-20 02:30 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.16354), வரும் டிசம்பர் 13-ந்தேதி முதலும், காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் ரெயிலில் (16353) வரும் டிசம்பர் 14-ந்தேதி முதலும் இலகுரக பெட்டிகளாக (எல்.எச்.பி. பெட்டிகள்) இணைத்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எல்.எச்.பி. பெட்டிகள் என்பது நவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட ரெயில்பெட்டிகளாகும். இது சாதாரண பெட்டிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல உகந்தது, விபத்து காலங்களில் பாதுகாப்பாக இருப்பது, எளிதில் தீப்பிடிக்காதது மற்றும் அதிவேக ரெயில்களுக்கு உகந்ததாக இருப்பது போன்ற சிறப்பம்சங்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்