கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.;

Update:2025-06-11 12:43 IST

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (வயது 55). இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். ரசல்ராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரசல்ராஜ் ஜூன் 8ம்தேதி வீட்டிற்கு அருகே, தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்