கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ - கல்லூரிக்கு விடுமுறை

மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.;

Update:2025-02-24 14:52 IST

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு அடிவாரத்தில் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது.

இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் இன்று காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென வேகமாக பரவ தொடங்கியது. இதனால் மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக கல்லூரிக்கு நிர்வாகம் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது.

அங்கு படித்து வரும் அனைத்து மாணவிகளையும் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த மலைப்பகுதியில் காய்ந்த புற்கள் மற்றும் மரங்கள் அதிகளவு இருப்பதால் தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்