கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி

குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-10-05 20:23 IST

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திராநகர் காலனியில் வசித்து வரும் மக்களின் சுகாதார வசதிக்காக, கடந்த 2018-ம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 5 பொது கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் அந்த கழிப்பறைகள் இன்று வரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, இன்னும் தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல நலத்திட்டங்கள் வழங்கியும் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இதுபோன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கும் பயனில்லை; எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான கழிவறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திராநகர் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்