கன்னியாகுமரி: வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார்.;
கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 27). இவர் தற்போது பருத்தியறைதோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். கொத்தனாரான இவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
இவர் வாங்கிய கஞ்சாவில் இருந்த விதையை வீட்டிற்கு கொண்டு வந்து பூந்தொட்டியில் விதைத்து அதை வளர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செடி தொட்டியில் வளர்த்து வந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்ததோடு அஜினை கைது செய்து சிறையிலடைத்தனர்.