கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர்;
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை கேட்டிருந்தது.
இந்நிலையில், தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் மாநில கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் கவர்னரும் அறிக்கை கேட்டுள்ளார்.