காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம் - டி.டி.வி.தினகரன்
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் காமராசர் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.