மதுரை: விடுதியில் ஐ.டி.ஐ. மாணவர் மீது தாக்குதல் - பாதுகாவலர் சஸ்பெண்ட்

மாணவர் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.;

Update:2025-09-23 11:38 IST


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் விடுதியில் இருந்த சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அந்த விடுதியின் பாதுகாவலர் பாலமுருகன் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே ராகிங் நடந்த விடுதியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவஹர் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்