பராமரிப்பு பணி: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் நிறுத்தம்
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.