உழைப்பை உறிஞ்சி தூக்கி எறிந்து விட்டீர்கள்; வைகோவுக்கு மல்லை சத்யா பரபரப்பு கடிதம்

மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும் என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.;

Update:2025-09-01 16:13 IST

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்திருக்கிறீர்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும்.

ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கின்றார் என்பது தானே உண்மை. நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது, எதையும் நாங்கள் நம்பாமல் கண் முடித்தனமாக வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.

ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள்.

இவ்வாறு மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்