மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மெரினா நீச்சல் குளம்
மெரினா நீச்சல் குளம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக மெரினா நீச்சல் குளம் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. ரூ.2.50 கோடி செலவில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முடிவுற்றது. எனவே, மெரினா நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை (செவ்வாய்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது.
நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். இதில், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு பெரியவர்களுக்கு ரூ.50 எனவும், ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10 சதவீதம் சலுகை வழங்கி ரூ.45-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதேபோல, 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.30, ஆன்லைனில் பதிவு செய்தால் ரூ.25-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகளுக்காக வார விடுமுறையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.