"வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் முருகன்.." - எடப்பாடி பழனிசாமி
தைப்பூச திருநாளை அரசு பொது விடுமுறையாக அ.தி.மு.க. அறிவித்தமையை பெருமிதத்துடன் நினைவு கூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,
தைப்பூச திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அ.தி.மு.க. அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.