நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னை,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்த விமானி கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானத்தை அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.