மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி
மு.க.முத்து உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
மு.க.முத்து காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் நேரில் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சென்னை ஈச்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மு.க.முத்துவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி மலர்மாலை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை தேற்றினர். தொடர்ந்து மு.க.முத்துவுக்கு கனிமொழி எம்பி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.