3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் 'ஒன் டூ ஒன்' சந்திப்பு

3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தினார்.;

Update:2025-11-12 11:29 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்படுகிறது.

அதேபோல மக்கள் பிரச்சினைகள், மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களுக்கு சட்டரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற நிகழ்ச்சி மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

அந்த வகையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்