மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், சங்கரன்கோவில் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (12.11.2025, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம் பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (12.11.2025, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.