மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (6.1.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.01.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதன்படி திருநெல்வேலி டவுன், பழையபேட்டை, காந்திநகர், அபிஷேகபட்டி, திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை தொழிற்பேட்டை, கோடீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், சுந்தரதெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
இதேபோல் நாளை மறுநாள் (6.1.2026, செவ்வாய்க்கிழமை) மேலப்பாளையம் II பிரிவிற்குட்பட்ட ரிலையன்ஸ் பல்க் முதல் சந்தை ரவுண்டாணா சாலை வரை நெடுஞ்சாலையின் விஸ்தரிப்பு பணியின் பொருட்டு மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு கருதி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 வரை அம்பை மெயின் ரோடு, வசந்தபுரம், Happy colony, அலிம்நகர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள்(6.1.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைபட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P.Nadanur, தூப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.1.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
களக்காடுநகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.