பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு: மகன் படுகாயம்

வாகைகுளம் டோல்கேட் அருகே தாயும், மகனும் ஒரு பைக்கில் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.;

Update:2026-01-04 15:11 IST

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் தெற்கு காலனியைச் சேர்ந்த இளையராஜா மனைவி தமிழரசி (வயது 45). இவர் நேற்று தனது மகன் மதன்(21) என்பவருடன் பைக்கில் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் திம்மராஜபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வாகைகுளம் டோல்கேட் அருகே சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக 2 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர் பரிசோதனை செய்தபோது தமிழரசி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் மதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்