ஈன்ற குட்டி இறந்தது: தாய் யானை பாசப்போராட்டம்

குட்டி இறந்தது தெரிந்தும், தாய் யானை அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.;

Update:2025-08-22 23:37 IST

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதியில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நெல்லியம்பதி வனப்பகுதியை ஒட்டியுள்ள மணலாறு எஸ்டேட் டிவிஷன் குனப்பாலம் பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒரு காட்டு யானை குட்டி ஈன்றது.

ஆனால், குட்டி யானை இறந்து இருந்தது. இதை கண்ட தாய் யானை, குட்டி உயிருடன் இல்லை என்பதை அறிந்தும் நீண்ட நேரம் அதே இடத்தில் நின்று பாச போராட்டம் நடத்தியது. குட்டி யானையின் உடல் அருகே தாய் யானை அசையாமல் நின்று கொண்டிருந்தது. பல மணி நேரத்துக்கு பிறகு தாய் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் காட்டு யானை குட்டி ஈன்றதும், அது இறந்து விட்டதும் உறுதியானது. குட்டி இறந்தது தெரிந்தும், தாய் யானை அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்