சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தடைந்து உள்ளார். இதன் பின்னர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இரவு 8 மணியளவில் சீமான் நேரில் ஆஜராக இருக்கிறார். இந்த சூழலில், சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகே தங்களை அனுமதிக்கும்படி கூறி, கோஷம் எழுப்பினர்.
எனினும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.