நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நீட்டிப்பு
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் கப்பல் சேவை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.;
கோப்புப்படம்
நாகை,
தமிழ்நாட்டின் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ’சுபம்’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் சேவை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் மாதம் 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளிலும் சேவை நீட்டிக்கப்பட்டு, வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயங்கும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், தீபாவளி பண்டிகை அன்று மட்டும் கப்பல் சேவை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.