நாகர்கோவில்: மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் உயிரிழப்பு
புத்தேரி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பணியில் இருந்த, உடன்குடியைச் சேர்ந்த கேங்மேன் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீரென உயிரிழந்தார்.;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணியின்போது புத்தேரி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பணியில் இருந்த கேங்மேனான உடன்குடியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவர் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீரென உயிரிழந்தார்.
அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது மாரடைப்பு (வலிப்பு) ஏற்பட்டு பலியானாரா என்று வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் இருந்து உடலை இறக்கினர். பின்னர் போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.