நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.;
Image Courtesy: PTI
சென்னை,
சென்னை - நெல்லை இடையே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை நீங்கலாக தினமும் காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்படும் இந்த ரெயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
அதன்பிறகு, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடனேயே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், 16 பெட்டிகளாக உயர்த்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. மேலும், கோவில்பட்டியிலும் கூடுதலாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலை 6.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாகவே, அதாவது காலை 6 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.